Wednesday, May 1, 2013

மாதுளை சாப்பிட்டால் நீங்க ஆரோக்கியசாலி தான்!!!

TamilKadalai Natural Medicine's


மாதுளை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இனிய கனி வகை, என்பது போன்ற பல வித வர்ணனைகளைக் கொண்டது. இது வருடந்தோறும் கிடைக்கக்கூடிய கனி என்பது இதன் கூடுதல் நன்மையாகும். எனினும், பெரும்பாலானோர் இதை மருத்துவ குணங்கள் நிறைந்த கனிவகைகளுள், சாமானியமான ஒன்றாகவே கருதுகின்றனர். அதனால் அவற்றை தினமும் டயட்டில் சேர்த்துக் கொண்டும் வருகின்றனர்.
ஏனெனில் அந்த அளவில் இதன் மருத்துவ குணமானது அதிகம். ஆனால் சிலருக்கு இந்த பழத்தை பொறுமையாக உரித்து சாப்பிட நேரமில்லாததால், இதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். அவ்வாறு தவிர்த்தால், அது நமக்கு தான் நஷ்டம். இப்போது இந்த அற்புத கனியின் அரிய மருத்துவ குணங்களைப் பற்றி விளக்கிக் கூறுவதன் மூலம், அக்கனிக்குரிய நம் மனமார்ந்த பாராட்டுக்களை வழங்கலாம். மாதுளையின் மருத்துவப் பயன்கள்!!!
இளமையை தக்க வைத்தல்
மாதுளைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தன்மையினால், அவை கட்டற்ற மூலக்கூறுகளினால் உண்டாகக் கூடிய இளமூப்பு வியாதியிலிருந்து, உடலின் உயிரணுக்களைக் காக்கக் கூடிய வல்லமை பொருந்தியவையாய் உள்ளன. இக்கட்டற்ற மூலக்கூறுகள், சூரியனின் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச் சூழலிலுள்ள மாசுக்களின் பாதிப்புகளினால் உண்டாகின்றன.
இயற்கையான இரத்த மெலிவூட்டிகள்
இரண்டு வகையான இரத்த உறைவுகள் உள்ளன. முதல் வகையான உறைவு, வெட்டுக்காயங்கள் மற்றும் சிராய்ப்புகளினால் உண்டாகும் காயங்களிலிருந்து புறத்தோலை விரைவாக மீளச் செய்யும் ஆற்றல் கொண்டது. இவ்வகைக் காயங்களில், உடனடி இரத்த உறைவு, அதிக இரத்தப் போக்கை தடுக்கக் கூடியது. அதனால் இது கட்டாயத் தேவையாக உள்ளது. இரண்டாவது வகை இரத்த உறைவு, உடலின் உள்ளே நிகழக்கூடியது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதயம் மற்றும் இரத்த நாளங்களில் உண்டாகும் உறைவுகள் மற்றும் சிறுநீர்த்தேக்கம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். இவ்வகை பாதிப்புகளில், இரத்தம் உறைவதினால் மரணம் கூட நிகழலாம். எனவே இதற்கெல்லாம் மாதுளை சரியான தீர்வு தரும்.
பெருந்தமனி தடிப்பு நோய் (atherosclerosis)
வயது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்வியல் பழக்கங்களினால், கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருள்கள் உடலுக்குள் சென்று சேர்ந்து, இரத்த நாளங்களின் சுவர்களை இறுகிக் கொள்ள வைக்கும். மாதுளையின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், “அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன்” என்றழைக்கப்படும் கெட்ட வகை கொலஸ்ட்ராலை தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.
ஆக்ஸிஜன் மாஸ்க்
எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன.
மூட்டுவாதம்
மாதுளையின் மருத்துவ குணங்கள், எலும்புகளையும் எட்டுகின்றன. இது, மூட்டுவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின், ‘குருத்தெலும்பு’ என்றழைக்கப்படும் சவ்வுப் பகுதியை, அதீத பாதிப்புக்குள்ளாவதிலிருந்து தடுக்கிறது. இந்தக் கனி, வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கும் ஆற்றலும், குருத்தெலும்பை பாதிக்கும் நொதிகளை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டவை.
விறைப்புத்தன்மை குறைபாடு
மாதுளை, இந்த தர்மசங்கடமான பிரச்சினையை, தீர்க்கவல்லதாகும். ஆனால், இது இப்பிரச்சினைக்கு உடனே முழு நிவாரணம் வழங்கக்கூடிய அதிசய மருந்து என்று நினைத்தல் தவறு. மாதுளைச் சாறு, இக்குறையை மிதமாக மட்டுமே நிவர்த்திக்கக்கூடும். இதைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை வெளியிடவில்லை. ஆனால் இந்த கருத்துக்கு, சில ஆதரவாளர்களும் இருக்கவே செய்கின்றனர்.
புரோஸ்டேட் புற்றுநோய்
இந்த கருத்தும், திடமான முடிவுடையது அல்ல. ஆனால், இரு வேறு ஆய்வுகள், மாதுளைச் சாறு புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிராக போராட உதவுகிறது என்று கூறுகின்றன. ஆய்வுக்கூடத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனையில், மாதுளைச் சாறு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, அவற்றின் அழிவை அதிகரிக்கச் செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதய நோய்கள்
ஆய்வுக்கூடப் பரிசோதனையில், மாதுளைச் சாறு, இதய நோயாளிகளின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொடுக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை: மாதுளைச் சாறு, இதய நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுப்போர்க்கு, எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம்.
வயிற்றுப்போக்கு வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர், மாதுளைப் பழத்தை உட்கொள்வதன் மூலம் போக்கலாம்.
உடல் எடை குறைய
மாதுளை, அதிக கலோரிகள் இல்லாத பழமாதலால், இது உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


Comments

Loading... Logging you in...
  • Logged in as
There are no comments posted yet. Be the first one!

Post a new comment

Comments by