Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, May 1, 2013

பவர்ஸ்டார் மீது மேலும் 3 வழக்கு


நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நேற்று பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மேலும் 3 மோசடி புகார்கள் அளிக்கப்பட்டன.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தேவதாசன் என்பவர் சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விபரம் வருமாறு, நான் கண்ணூரில் உள்ள நகை கடையில் பங்குதாரராக உள்ளேன். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டேன்.
2010ல் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமான பாபா டிரேடிங் கம்பெனியின் ஏஜெண்ட் என்று சொல்லிக் கொண்டு சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் எனக்கு அறிமுகமானார். கடன் வாங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
பின்னர் சென்னை அண்ணா நகரில் உள்ள பாபா டிரேடிங் கம்பெனியில் பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்க வைத்தார். ரூ.6 கோடி கடன் வேண்டும் என்றேன்.
இதையடுத்து என் சொத்து விவரங்கள் பற்றி சீனிவாசன் கேட்டு அறிந்தார். ரூ.5.35 கோடி கடன் பெற ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.21.50 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினார்.
நான் ரூ.21 லட்சத்துக்கு செக்கும், ரூ.50 ஆயிரம் ரொக்கமாகவும் கொடுத்தேன். ஆனால் அவர் கடன் பெற்று தரவில்லை. பலமுறை அலைந்த பின்பு நுங்கம்பாக்கம் யெஸ் பேங்க்கில் மாற்றத்தக்க வகையில் ரூ.2 கோடிக்கு காசோலை கொடுத்தார்.
அதை வங்கியில் கொடுத்தபோது கையெழுத்து மாறி உள்ளது என்று திருப்பி கொடுத்து விட்டனர்.
சீனிவாசன் என்னை ஏமாற்றி விட்டார். மீண்டும் சந்தித்து எனக்கு கடன் வேண்டாம் நான் கொடுத்த ரூ.21 லட்சத்தை திருப்பி கொடுங்கள் என்றேன். ரூ.20 லட்சத்துக்கு செக் கொடுத்தார்.
அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இன்றி திரும்பி வந்து விட்டது என்றும் எனவே மோசடி செய்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீதும், ஏஜெண்ட் கிறிஸ்டோபர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சென்ன கிருஷ்ணன் தனக்கு ரூ.1 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி கமிஷனாக ரூ.10 லட்சம் வாங்கி மோசடி செய்து விட்டார் என்று புகார் செய்துள்ளார்.
அண்ணா நகரை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் தனக்கு வாடகை பாக்கியாக ரூ.1.80 லட்சம் தரவேண்டும் என்றும் புகார் செய்துள்ளார்.
மோசடி வழக்குகள் குவிவதால் புதுப்படங்களில் பவர் ஸ்டார் சீனிவாசனை ஒப்பந்தம் செய்த இயக்குனர்கள் தவிப்பில் உள்ளனர். அவரை நீக்கி விட்டு வேறு கொமெடி நடிகரை ஒப்பந்தம் செய்ய அவர்கள் யோசிப்பதாக கூறப்படுகிறது.

Thursday, December 29, 2011

கொலவெறி"க்காக தனுஷை அழைத்த பிரதமர்!

நடிகர் தனுஷ் “கொலை வெறி” பாடலால் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வருகின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா என சுற்றி வருகிறார். பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தனுசை அழைத்து அறிமுகம் செய்கின்றன.
கொலை வெறி பாடல் பிரதமர் மன்மோகன் சிங்கையும் எட்டியுள்ளது. இதையடுத்து பிரதமர் விருந்தில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது. ஜப்பானிய பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது.
பாடல் பிரபலமானது குறித்து தனுஷ் கூறும்போது, கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் வெற்றி பெறுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவருக்கும் தொடர்பு உள்ளவை, நகைச் சுவை மற்றும் பாடலில் உள்ள கருத்துக்களும் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்துள்ளது.

Love Anthem For World Peace Lyrics - Simbu(STR)

dashuri dashuri
dashuri dashuri
salang salang
leifde leifde
las'ka las'ka
armastus armastus
rakkaus rakkaus
ag'api ag'api
lyubov lyubov

all we need is
love..aai..amour..amour
all we need is
love..aai..amour..amour

all we need is
love..aai..amour..amour

all we need is
love..aai..amour..amour..amour


love is full of energy
love is positivity
we don't need negativity
love to feel humanity
lets not cry and lets not try
hating,hurting and killing each other
we wont get another
life together
oh my brother

all we need is
pyaar..prema..kaadhal
all we need is
pyaar..prema..kaadhal..kaadhal




All the following words denotes love in different languages.
♥Love - English
♥dashuri - Albanian
♥salang - Korean
♥leifde - Dutch
♥las'ka - Czech
♥armastus - Estonian
♥rakkaus - Finnish
♥ag'api - Greek
♥lyubov - Russian
♥Aai - Chinese
♥Amour - French/Spanish
♥Pyaar - Hindi
♥Prema - Telugu
♥Kaadhal - Tamil

Sunday, December 25, 2011

இளையராஜா வீடு முன்பு ஆர்ப்பாட்டம்

கேரளத்தைச் சேர்ந்த மலபார் கோல்ட் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

கேரளத்தவர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கடையடைப்பு உள்ளிட்டவை நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா வீடு முன்பு பெரியார் தி.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். டிசம்பர் 28ம் தேதி மலபார் கோல்ட் நிறுவன இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்கிறார். இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். மலபார் கோல்ட் நிறுவனம் கேரளாவைச் சேர்ந்ததாகும். இதனால் இதில் இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளக் கூடாது, அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.கவினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்களில் சிலர் வீட்டுக்குள் சென்று இசை நிகழ்ச்சியை இளையராஜா புறக்கணிக்க வேண்டும் என்று கோரி மனு ஒன்றையும் அளித்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது.

சனீஸ்வரனை கும்பிட்ட விவேக்

தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சாமி கும்பிடுபவர்களையும், வாஸ்து உளளிட்டவற்றை நம்புபவர்களையும், கடவுள் பக்தி உள்ளவர்களையும் சரமாரியாக விமர்சிக்கும், நக்கலடிக்கும், கிண்டலடிக்கும் காமெடி நடிகர் விவேக், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் சாமியை பய பக்தியுடன் வணங்கிய விவரம் வெளியாகியுள்ளது.

நாத்திகம் பேசுவோரில் பலரும் உள்ளுக்குள் ஆத்திகவாதிகளாகவே இருந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் முதல் அத்தனை துறையினரும் இதற்கு விதிவிலக்கில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஒரு தீவிர நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது குடும்பத்தினர் தீவிர ஆத்திகர்கள்.

அதேபோல சினிமாவில் விவேக்கைப் போல நாத்திகம் பேசியவர்கள் யாருமில்லை. நான் பெரியாரின் வழி வந்தவன் என்று பெருமை பொங்கக் கூறுவது விவேக்கின் வழக்கம். மேலும், தனது படங்களிலெல்லாம் ஆத்திகர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டலடிப்பார் விவேக். குறிப்பாக வாஸ்து பார்க்கிறவர்களையும், நாள் நட்சத்திரம் பார்ப்பவர்களையும், சாமியை நம்பி காரியத்தில் இறங்குகிறவர்களையும் இவர் கிண்டல் அடிக்காத படமே இல்லை.

அப்படிப்பட்ட விவேக், திருநள்ளாறு கோவிலுக்குப் போய் சனீஸ்வரனை பய பக்தியுடன் வணங்கி விட்டு வந்துள்ளார்.

சமீபத்தில் சனிப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருநள்ளாறு கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து சனி பகவானை தரிசித்துச் சென்றனர். பரிகாரங்களைச் செய்தனர்.

சனிப் பெயர்ச்சிக்கு அடுத்த நாளான சனிக்கிழமையன்று அமாவாசை என்பதால் அது விசேஷ தினமாக இந்துக்களால் கருதப்படுகிறது. இதையொட்டி அன்றும் பல லட்சம் பேர் சனி பகவானை தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர்.

அந்த நாளில்தான் காமெடி நடிகர் விவேக்கும் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் உள்ளூர் எம்.எல்.ஏ. சிவாவும் வந்திருந்தார். கோவிலுக்கு வந்த விவேக் ஒவ்வொரு சன்னதியாக சென்று பய பக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவில் பிரசாதத்தையும் பய பக்தியுடன் வாங்கிக் கொண்டார்.

இந்த திடீர் 'பய' பக்தி எதனாலோ...!

Thursday, December 8, 2011

பாகிஸ்தான் நடிகைக்கு ரூ.25 கோடி கேட்டு நோட்டீஸ்

மும்பை : பாகிஸ்தானை சேர்ந்த நடிகை வீணா மாலிக், பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். டிவி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். எப்எச்எம் என்ற ஆங்கில பத்திரிகையின் அட்டை படத்தில் அவரது முழு நிர்வாண படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பழமைவாத கருத்து கொண்ட பாகிஸ்தானில் அவருக்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ‘அந்த பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தது உண்மை. நிர்வாண போஸ் தரவில்லை. ஆனால், ஒட்டு வேலை செய்து விட்டனர்’ என்று மறுத்தார் வீணா மாலிக். ஆனால், ‘அவர் பல கோணங்களில் நிர்வாண போஸ் கொடுத் தது உண்மை’ என்று பத்திரிகை தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஸி10 கோடி இழப்பீடு கேட்டு எப்எச்எம் பத்திரிகை முதன்மை ஆசிரியர் கபீர் சர்மா, போட்டோகிராபர் விஷால் சக்சேனா ஆகியோருக்கு வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதிலளித்து அவர்கள் சார்பில் வீணாவுக்கு பதில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ‘ஆடையின்றி போட்டோ எடுக்கவும், வீடியோ பதிவுக்கும் அனுமதித்ததுடன்,

 உங்கள் முழு சம்மதத்துடன் அச்சான படங்களை சித்தரிக்கப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறு. படப்பிடிப்பின் போது முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், இப்போது மறுத்து நோட்டீஸ் அனுப்பியதை ஏற்க முடியாது. எங்களிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதால் நோட்டீசை திரும்ப பெற வேண்டும். தவறினால் ஸி25 கோடி இழப்பீடு கேட்டு உங்கள் மீது வழக்கு தொடரப்படும்’ என்று வீணா மாலிக்குக்கு எப்எச்எம் அனுப்பிய நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Friday, December 2, 2011

வாடகை கார் பிரச்னை! புவனேஸ்வரி மீது புகார்!!

வாடகைக்கு எடுத்த காரை, திருப்பிக் கொடுக்காமல் 10 மாதங்களாக தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளார் என நடிகை புவனேஸ்வரி மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனாசியர். இவருக்கு சொந்தமான ரூ. 9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை மாதம் ரூ. 40 ஆயிரம் வாடகைக்கு எடுத்துள்ளார் புவனேஸ்வரி. முதல் மாதம் மட்டும் வாடகை கொடுத்து விட்டு அதன் பிறகு 10 மாதங்களாக வாடகை பணம் தராமல் காரை திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருவதாக அசோக்குமார், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

காரை திருப்பி தருமாறு கேட்டதற்கு அடியாட்களை அனுப்பி மிரட்டுவதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மனு தியாகராய நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் புவனேஸ்வரியை விசாரிக்க அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Wednesday, October 5, 2011

சீமான்: விஜய் கோபம்!

டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவாகப்போகும் புதிய படத்திற்கு கோபம் என்று பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புரட்சிகரமான படங்களை ‌எடுத்து வரும் டைரக்டர் சீமான், அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு பகலவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாயகனாக விஜய் நடிக்கவிருக்கிறார். சிறைக்குள்ளேயை திரைக்கதை எழுதி முடித்து திரும்பியிருக்கும் சீமான்,


படத்தின் டைட்டிலை கோபம் என வைத்துக் கொள்ளலாமா? என்று நாயகன் விஜய்யிடம் கேட்டிருக்கிறார். காவலன் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத கோபத்தில் இருக்கும் விஜய்யும், கோபம் என்ற தலைப்புக்கு டபுள் ஓ.கே. சொல்லி விட்டாராம். இதனால் பகலவன் விரைவில் கோபம் என்று மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிகின்றன. அ‌தேநேரம் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த படத்தில் இருந்து விலகி, படத்தை கை மாற்றி விட துடிக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியிருக்கிறது. தாணு விலகினாலும் கோபத்தை மட்டும் விட்டுவிடக்கூடாது என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம் விஜய்யும், சீமானும்! 

Tuesday, October 4, 2011

அரை நிர்வாண போஸ் தரவில்லை – காஜல் அகர்வால்


மும்பை: பேஷன் இதழ் அட்டைப்படத்துக்கு அரைநிர்வாண போஸ் தரவில்லை என்று நடிகை காஜல் அகர்வால் மறுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்துவருபவர் காஜல் அகர்வால். ஆண்களுக்கான எப்எச்எம் பேஷன் இதழ் அட்டைக்கு இவர் அரை நிர்வாண போஸ் கொடுத்திருந்தார். அந்த அட்டைப்படமும் வெளியானது. ஆனால், நான் அரை நிர்வாண போஸ் தர வில்லை என்று காஜல் தற்போது மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பத்திரிகைக்கு போஸ் கொடுத்தது உண்மைதான். அப்போது, மார்பு பகுதியை கவ்வி பிடிக்கிற கருப்பு நிற ‘டியூப் டாப்’ மேலாடை அணிந்திருந்தேன். அட்டை படத்துக்காக பல போட்டோக்கள் எடுத்தார்கள். அவற்றை என் ஒப்புதலுக்கு அனுப்பினார்கள். அந்த படங்கள் இப்போதும் என்னிடம் உள்ளன. ஆனால் அந்த இதழில் வெளியானதுபோல, டாப்லெஸ் போஸ் கொடுக்கவில்லை. மார்பிங் மூலம் இவ்வாறு செய்துள்ளனர். நான் பேட்டி கொடுத்ததாகவும் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எந்த பேட்டியும் அளிக்கவில்லை.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தன் மரியாதை, கண்ணியத்தை குலைக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காஜலின் குற்றச்சாட்டை எப்எச்எம் ஆசிரியர் கபீர் சர்மா மறுத்துள்ளார். ‘‘மும்பையில் ஆகஸ்ட் 18-ம் தேதி காஜல் அகர்வால், அட்டை படத்துக்கு போஸ் கொடுத்தார். அதை மட்டுமே பயன்படுத்தியுள்ளோம். மார்பிங் எதுவும் செய்யவில்லை’’ என்று கூறியுள்ளார்.

ஜடா முடியுடன் போராளி படத்தில் சசிகுமார்


சென்னை: போராளி படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார் சசிகுமார். இதற்காக 2 வருடம் கஷ்டப்பட்டு நீண்ட தலைமுடியை வளர்த்துள்ளார்.
சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன் வரிசையில் இந்த முறை சமுத்திரக் கனி இயக்க, சசிகுமார் நாயகனாக நடிக்கிறார் போராளி படத்தில். சசிகுமார்தான் தயாரிக்கிறார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில்  நடந்தது. படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு ஆகியோரும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர். பிஆர்ஓ நிகில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் சசிகுமார் பேசியதாவது:அது என்ன போராளி என்ற கேள்வியோடு பலர் வந்திருப்பீர்கள். இது தீவிரவாதம் பற்றியதல்ல. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ எவ்வளவோ போராட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது.
வீட்டை விட்டு வெளியில் வந்து மீண்டும் வீட்டுக்குள் போவதற்குள் ஆயிரம் போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அப்படி போராடும் 4 பேரின் கதைதான் ‘போராளி.’ நான் (சசிகுமார்), அல்லரி நரேஷ், ஸ்வாதி, நிவேதா ஆகிய 4 பேரும்தான் அந்த போராளிகள்.
‘போராளி’ படத்துக்காக, கடந்த 2 வருடங்களாக நான் தலைமுடியை வளர்த்தேன். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நீண்ட தலைமுடி வளர்த்தேன். இப்போது நீங்கள் பார்ப்பது வேறு. படத்தில் இந்த ஜடா முடியுடன் எனக்கு இன்னொரு தோற்றமும் இருக்கிறது.
இவ்வாறு சசிகுமார் பேசினார்.

நடிகை குஷ்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி


சென்னை, செப்.7: நடிகை குஷ்புக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு சூறாவளி பிரசாரம் செய்தார். ஆனால், தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது.
தேர்தல் முடிவு குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கையில், ‘‘இனி 5 ஆண்டு காலத்துக்கு தமிழக மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்று கூறினார்.
இது தொடர்பாக  சேலத்தைச் சேர்ந்த வக்கீல் அறிவழகன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ‘மக்கள் தீர்ப்பை அவமானப்படுத்தும் வகையில் பேசிய குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனருக்கு மனு கொடுத்தேன். இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம் அதனை தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.

ஊட்டியில் நடிகர் மோகன்லால் வீட்டில் கேரள அதிகாரிகள் திடீர் சோதனை Ooty residence of actor Mohanlal raided


ஊட்டியில் நடிகர் மோகன்லாலுக்குச் சொந்தமான வீட்டில் கேரள மாநில வருவாய்த் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மலையாளம் முன்னணி நடகரான மோகன்லால் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கேரளத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் பங்களாக்கள் உள்ளன. ஊட்டியில் உள்ள அவரது பங்களாவில் கேரள அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஆனால் கேரள மாநில தொல்லியல் துறை ஜீப்பில் வந்து சோதனை நடத்தப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
மோகன்லால் பழங்காலப் பொருட்கள் யானைத் தந்தம் உள்ளிட்ட சில பாரம்பரிய பொருட்களை வாங்கிவைத்துள்ளதால் அதுகுறித்தும் சோதனை நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இருப்பினும் என்ன காரணத்துக்காக இந்த சோதனை நடத்தப்படுகிறது என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சக்சேனா மீது டைரக்டர் ஷக்தி சிதம்பரம் ரூ. 1 கோடி மோசடி புகார் Rs 1 crore cheating case against Sun CEO Saxena


சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் எந்திரன் பட வினியோகத்தில் ரூ.1.6 கோடி மோசடி செய்ததாக டைரக்டர் ஷக்தி சிதம்பரம் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல டைரக்டர் ஷக்தி சிதம்பரம் இன்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா மற்றும் அய்யப்பன் மீது பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சன் பிக்சர்ஸ் 2010-ல் எந்திரன் படத்தை ரிலீஸ் செய்தது. செங்கல்பட்டில் 8 தியேட்டர்களில் அப்படத்தை வெளியிடும் உரிமையை கேட்டு சக்சேனாவை அணுகினேன். அவர், தனது பினாமி நிறுவனமான புளூஸ்கை கம்பெனி உரிமையாளர் சுரேசை சந்திக்கும்படி அனுப்பினார். அவரிடம் பேசினேன்.
அதன்பிறகு ரூ.4 கோடிக்கு எந்திரன் பட உரிமையை எனக்கு அளித்தனர். பின்னர் எனக்கு வழங்கப்பட்ட ஒரு தியேட்டர் உரிமையை அவர்களே வைத்து கொண்டனர். அந்த தியேட்டரில்தான் அதிக வசூல் இருந்தது.
இப்படத்தை வெளியிட்ட தன் மூலம் எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அந்த பணத்தை திருப்பி கேட்டபோது, இது கலாநிதிமாறன் கம்பெனி. பணத்தை தர முடியாது என்று சொல்லி மிரட்டினர். என்னை தனி அறையில் அடைத்து வைத்து சக்சேனா, அய்யப்பன், சுரேஷ் ஆகியோர் சித்ரவதை செய்தனர். கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பணத்தையும் வாங்கி தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் ஷக்தி சிதம்பரம் கூறி உள்ளார்.

மாடல் அழகி பூனம் அரைநிர்வாண போஸ்


மும்பை செப். 5:பரபரப்புக்கு பேர் போன பிரபல மாடல் அழகி பூனம் பாண்டே தனது அரைநிர்வாண படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சோர்வடைந்த இந்திய அணியை சுறுசுறுப்பாக்க இவ்வாறு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரியில் தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடந்தது. போட்டிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது, இந்திய மாடல் அழகி பூனம் பாண்டே (20) பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்திய அணி கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்பதுதான் அந்த அறிவிப்பு. அப்போதே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதாக எண்ணி மகிழ்ந்தார்கள் இளம் ரசிகர்கள். பூனம் பாண்டே கிரிக்கெட்டை கொச்சைப்படுத்துவதாகவும் பெண்களை கேவலப்படுத்துவதாகவும் மாதர் அமைப்புகள், கட்சிகளின் மகளிர் அணிகள் கொந்தளித்தன. பா.ஜ. மகளிர் அணி மும்பை போலீசில் பூனம் பாண்டே மீது புகார் கொடுத்தது. பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில், அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இந்த பரபரப்புக்கு நடுவே, ஏப்ரல் 2-ம் தேதி நடந்த பைனல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால், சொன்னது போல் செய்யவில்லை பூனம்.
‘தவிர்க்க முடியாத காரணங்களால், சொன்னதை செய்ய முடியவில்லை’ என்று பின்னர் ஒரு பேட்டியில் சொன்னார் பூனம்.
தற்போது, இங்கிலாந்துடனான டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், மீண்டும் பரபரப்பு கிளப்பியிருக்கிறார் பூனம் பாண்டே. தான் நீச்சல் உடையில் இருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு அவர் அளித்திருக்கும் விளக்கம்: இங்கிலாந்தில் சமீபத்திய தோல்விக்கு பிறகு டோனி மற்றும் பாய்ஸ் சோர்ந்து போயிருக்கின்றனர். தற்போது நடந்து வரும் ஒருநாள் போட்டிகளில் எப்பாடு பட்டாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகத்தை நம் இந்திய டீமுக்கு தர வேண்டும். உலகில் இந்திய கிரிக்கெட்தான் எப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும்.
அதற்காக அவர்களை உற்சாகப்படுத்தவே இப்படி போஸ் கொடுத்திருக்கிறேன். தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை கண்டிப்பாக தோற்கடிக்கும். ஒவ்வொரு போட்டியிலும் இங்கிலாந்தை இந்திய அணி வெற்றி கொள்ளும்போதெல்லாம் எனது கவர்ச்சிப்படங்களை தொடர்ந்து வெளியிடுவேன்.
இவ்வாறு டுவிட்டரில் பூனம் கூறியுள்ளார்.

கமல் படம் விஸ்வரூபத்தில் ஹீரோயின் பிரச்னை


சென்னை: கமல் நடிக்கும் விஸ்வரூபம் படத்தில் ஹீரோயின் யார் என்ற பிரச்னையும் விஸ்வரூபமெடுத்துள்ளது. தற்போது அனுஷ்காவும் மறுத்துவிட்டதால் வேறு ஹீரோயினை தேடி வருகின்றனர்.
கமல் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்தின் ஹீரோயின் விஷயத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இப்போது கமல் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்காவும் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்கு இருவரும் ஜோர்டன் செல்லப்போவதாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்ஷி ஒப்பந்தமானார். படத்தை துவங்குவதில் ஏற்பட்ட அசாசாரண காலதாமதம் மற்றும் இயக்குநர் செல்வராகவன் மாற்றப்பட்டது போன்றவற்றால், படத்திலிருந்தே விலகிக் கொண்டார் சோனாக்ஷி.
இதன் பிறகுதான் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருந்தனர்.
ஆனால் இப்போது, அனுஷ்கா தனது கால்ஷீட்டை செல்வராகவன் படத்துக்கு கொடுத்துவிட்டதால், கமல் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளாராம்.
அனுஷ்காவுக்கு பதில் சமீரா ரெட்டி கமல் ஜோடியாக நடிப்பார் எனத் தெரிகிறது.

கரீனா என்னை கண்காணிக்கவில்லை – தீபிகா படுகோன் பேட்டி


மும்பை: கரீனாவின் காதலர் சயீப் அலிகானுடன் நடித்தபோது அடிக்கடி ஷூட்டிங்குக்கு வரும் கரீனா என்னை கண்காணிக்கவில்லை என்று தீபிகா படுகோன் கூறினார்.
அவர் கூறியதாவது:
என்னைப் பொறுத்தவரை பிரச்னை இல்லாத வேடங்களிலேயே இனி நடிக்க முடிவு செய்திருக்கிறேன். குறிப்பாக காதல் கதைகளையே தேர்வு செய்வேன். ரசிகர்களிடமிருந்து என்னை பிரிக்கும்படியான எந்த பாத்திரங்களிலும் நடிக்க மாட்டேன். சில ஹீரோயின்கள் மொட்டை போட்டு நடிக்கிறார்கள்.
அதுபோல் ஒருபோதும் நடிக்க மாட்டேன். காக்டெயில்  இந்தி பட ஷூட்டிங்கில் சயீப் அலிகானுடன் நான் நடித்தேன். அப்போது கரீனா கபூர் அடிக்கடி ஷூட்டிங்கிற்கு வருவார்.  என்னை கண்காணிப்பதற்காகவே அவர் அங்கு வந்ததாக சிலர் கூறுகிறார்கள். அது தவறு.
அவர் ஷூட்டிங் வந்தாலும் என்னுடன் ஜாலியாக பேசுவார். அவர் வந்ததால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினாலும் கன்னட படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான நேரம் அமையவில்லை. ரஜினியுடன் நடிக்கும் ‘ராணா’ படத்தின் நிலவரம் பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. அதன் ஷூட்டிங்கிற்கு வரும்படி எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை.
இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்.

அரசியல் படத்தில் முதல்வர் வேடத்தில் திரிஷா


சென்னை:  காவிரி பிரச்னையை மையப்படுத்தி நடக்கும் தமிழக, கர்நாடக அரசியலைப் படமாக்குகின்றனர். இந்த படத்தில் முதல்வர் வேடத்தில் திரிஷா நடிக்கிறார்.
சி.எம். என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் படமாகிறது. இதில் முதல்வர் வேடத்தில் திரிஷா நடிக்கிறார். முதலில் இந்த
கேரக்டருக்கு அனுஷ்காவை அணுகினர். அவரிடம் கால்ஷீட் இல்லாததால் திரிஷாவை தேர்வு செய்துள்ளனர். கன்னட பதிப்பில் சிவராஜ் குமாரும் தமிழில் அர்ஜூனும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
தமிழக, கர்நாடக அரசியல் உறவுகளையும் மக்களின் தொடர்புகளையும் பலப்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டு உள்ளது என்றார் படத்தின் இயக்குனர் ரகுராம்.

அனுஷ்காவுடன் எந்த தகராறும் இல்லை – லாரன்ஸ்


சென்னை: நடிகை அனுஷ்காவுக்கும் எனக்கும் சண்டை சச்சரவு ஏதும் இல்லை என்று டைரக்டர் லாரன்ஸ் கூறினார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. அடுத்து தெலுங்கில் ரீபெல் என்ற படத்தை இயக்குகிறார். இதில் அனுஷ்காவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அவர் நீக்கப்பட்டார்.
அனுஷ்காவுக்கு பதில் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். லாரன்சுக்கும் அனுஷ்காவுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் அதனாலேயே படத்தில் அவர் தூக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே காஞ்சனா படத்தில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் மாற்றப்பட்டு லட்சுமிராய் நடித்தார்.
இது குறித்து லாரன்சிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
ரீபெல் படத்திற்கு அனுஷ்காவை தேர்வு செய்தது உண்மைதான். ஆனால் அவர் நடிக்க முடியாமல்போனது எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதை வைத்து எங்களுக்குள் சண்டை என்று வதந்திகள் பரவியுள்ளன. அனுஷ்காவுடன் எனக்கு எந்த தகராறும் இல்லை.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.