Thursday, December 8, 2011

தோனிக்கு தீவிரவாதிகள் குறி : உளவுத்துறை எச்சரிக்கை!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்பவர் தோனி. தற்போது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வு எடுத்து வரும் தோனிக்கு, தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதே போல் இந்தியாவிலுள்ள சில முக்கிய பிரமுகர்களை கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த மிரட்டல்கள் லக்ஷர்-இ-தொய்பா, மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாத இயக்கங்கள் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டை சுற்றி ராணுவ பாதுகாப்பு அளிக்க அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.