Tuesday, May 14, 2013

வாய்ப்புண்ணை குணமாக்கும் காய்கறிகள்

TamilKadalai Natural Medicine's


கோடை காலம் வந்தாலே பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படும். வாய்ப்புண்ணுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண் ஏற்படுகிறது.
இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் கூறியதை நீங்களும் பின்பற்றிப் பாருங்களேன். தேங்காய் பால் வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும்.
இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும்.
10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
துளசி இலை ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும்.
துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.
மஞ்சள் மருந்து அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிடலாம். வாய்ப்புண், வயிற்றுப் புண் இருந்தால் குணமடையும். மறுபடியும் வாய்ப்புண் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
தக்காளியை கூழாக்கி அதை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும்.
அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும். புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பூ, வாழைப்பழம் துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும்.
வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.
வாய்ப்புண்ணுக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டால் அப்போதைக்கு மட்டுமே வலி குணமாகும். அதேசமயம் பாட்டி வைத்தியத்தை பின்பற்றினால் எந்த வித பக்கவிளைவுகளும் இல்லாமல் நிரந்தர குணம் கிடைக்கும் என்பதே உண்மை.

Comments

Loading... Logging you in...
  • Logged in as
There are no comments posted yet. Be the first one!

Post a new comment

Comments by