Monday, May 6, 2013

தங்கப் பதுமைக்கு திருமணம்



இந்தியாவின் மிக பெரிய தங்க நகைகள் அடகு நிறுவனமான முத்தூட் நிதி நிறுவனம் கேரளாவில் உள்ளது. இந்த நிதிநிறுவன இயக்குனரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணப்பெண் 5 கிலோ தங்க நகையணிந்து தங்க மயமாக காட்சியளித்துள்ளார்.

Wednesday, May 1, 2013

To Stop Smoking Habit - புகை பழக்கம் நிறுத்த !!

TamilKadalai Natural Medicine's


புற்றுநோயை உண்டாக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி அதை விடமுடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.
மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.
இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி…


How to prevent cancer? - புற்று நோய் தடுப்பது எப்படி?

TamilKadalai Natural Medicine's


மனிதர்களின் மரணத்துக்கு புற்றுநோய் ஒரு காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக வயிற்றுப் புற்றுநோயால் இறப்பு அதிகம் அதற்காக சாப்பிடமலே இருக்க முடியுமா?எதை சாப்பிடலாம் எதை சாப்பிடகூடாது என்பதை தெளிவாக பின்பற்றினால் புற்றுநோய் வராமல் உடலை பாதுகாக்கலாம்
சாப்பிட வேண்டியவை..
காளான், திராட்சை, ஆரஞ்சு மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள பழங்கள்,பூண்டு,முட்டைகோஸ்,காலிபிளவர், தக்காளி, கிரீன் டீயும் பருகலாம்
தவிர்க்க வேண்டியவை…..
ஊறுகாய், வெள்ளை ரொட்டி,அரிசிச்சோறு, சோடா மற்றும் குளிர்பானங்கள்,எண்ணெயில் பொறித்த மைதா- கடலை மாவு பண்டங்க,சிகப்பு மாமிசம் மற்றும் சிப்ஸ
சாப்பிட வேண்டியவற்றில் வைட்டமின் சியும் ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் தன்மையும், பீட்டா கரோடின் மற்றும் போலிக் அமிலங்களும் உள்ளதால் அவை புற்றுநோய்க்கு எதிராக செயல்பட்டு அதன் வீரியத்தை குறைத்துவிடும்.
தவிர்க்க வேண்டிய உணவுகளில் புற்றுநோயை அதிகரிக்கும் வீரியம் அதிகம். அதிக சர்க்கரை, கொழுப்பு, அமிலங்கள் கொண்டவை இவை. ஆகவே தவிர்ப்பது மிக மிக நல்லது.


மாதுளை சாப்பிட்டால் நீங்க ஆரோக்கியசாலி தான்!!!

TamilKadalai Natural Medicine's


மாதுளை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இனிய கனி வகை, என்பது போன்ற பல வித வர்ணனைகளைக் கொண்டது. இது வருடந்தோறும் கிடைக்கக்கூடிய கனி என்பது இதன் கூடுதல் நன்மையாகும். எனினும், பெரும்பாலானோர் இதை மருத்துவ குணங்கள் நிறைந்த கனிவகைகளுள், சாமானியமான ஒன்றாகவே கருதுகின்றனர். அதனால் அவற்றை தினமும் டயட்டில் சேர்த்துக் கொண்டும் வருகின்றனர்.
ஏனெனில் அந்த அளவில் இதன் மருத்துவ குணமானது அதிகம். ஆனால் சிலருக்கு இந்த பழத்தை பொறுமையாக உரித்து சாப்பிட நேரமில்லாததால், இதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். அவ்வாறு தவிர்த்தால், அது நமக்கு தான் நஷ்டம். இப்போது இந்த அற்புத கனியின் அரிய மருத்துவ குணங்களைப் பற்றி விளக்கிக் கூறுவதன் மூலம், அக்கனிக்குரிய நம் மனமார்ந்த பாராட்டுக்களை வழங்கலாம். மாதுளையின் மருத்துவப் பயன்கள்!!!
இளமையை தக்க வைத்தல்
மாதுளைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த தன்மையினால், அவை கட்டற்ற மூலக்கூறுகளினால் உண்டாகக் கூடிய இளமூப்பு வியாதியிலிருந்து, உடலின் உயிரணுக்களைக் காக்கக் கூடிய வல்லமை பொருந்தியவையாய் உள்ளன. இக்கட்டற்ற மூலக்கூறுகள், சூரியனின் கதிர்வீச்சு மற்றும் சுற்றுச் சூழலிலுள்ள மாசுக்களின் பாதிப்புகளினால் உண்டாகின்றன.
இயற்கையான இரத்த மெலிவூட்டிகள்
இரண்டு வகையான இரத்த உறைவுகள் உள்ளன. முதல் வகையான உறைவு, வெட்டுக்காயங்கள் மற்றும் சிராய்ப்புகளினால் உண்டாகும் காயங்களிலிருந்து புறத்தோலை விரைவாக மீளச் செய்யும் ஆற்றல் கொண்டது. இவ்வகைக் காயங்களில், உடனடி இரத்த உறைவு, அதிக இரத்தப் போக்கை தடுக்கக் கூடியது. அதனால் இது கட்டாயத் தேவையாக உள்ளது. இரண்டாவது வகை இரத்த உறைவு, உடலின் உள்ளே நிகழக்கூடியது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதயம் மற்றும் இரத்த நாளங்களில் உண்டாகும் உறைவுகள் மற்றும் சிறுநீர்த்தேக்கம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம். இவ்வகை பாதிப்புகளில், இரத்தம் உறைவதினால் மரணம் கூட நிகழலாம். எனவே இதற்கெல்லாம் மாதுளை சரியான தீர்வு தரும்.
பெருந்தமனி தடிப்பு நோய் (atherosclerosis)
வயது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்வியல் பழக்கங்களினால், கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருள்கள் உடலுக்குள் சென்று சேர்ந்து, இரத்த நாளங்களின் சுவர்களை இறுகிக் கொள்ள வைக்கும். மாதுளையின் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், “அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன்” என்றழைக்கப்படும் கெட்ட வகை கொலஸ்ட்ராலை தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.
ஆக்ஸிஜன் மாஸ்க்
எளிமையான வார்த்தைகளில் சொல்வதானால், மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன.
மூட்டுவாதம்
மாதுளையின் மருத்துவ குணங்கள், எலும்புகளையும் எட்டுகின்றன. இது, மூட்டுவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களின், ‘குருத்தெலும்பு’ என்றழைக்கப்படும் சவ்வுப் பகுதியை, அதீத பாதிப்புக்குள்ளாவதிலிருந்து தடுக்கிறது. இந்தக் கனி, வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கும் ஆற்றலும், குருத்தெலும்பை பாதிக்கும் நொதிகளை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டவை.
விறைப்புத்தன்மை குறைபாடு
மாதுளை, இந்த தர்மசங்கடமான பிரச்சினையை, தீர்க்கவல்லதாகும். ஆனால், இது இப்பிரச்சினைக்கு உடனே முழு நிவாரணம் வழங்கக்கூடிய அதிசய மருந்து என்று நினைத்தல் தவறு. மாதுளைச் சாறு, இக்குறையை மிதமாக மட்டுமே நிவர்த்திக்கக்கூடும். இதைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை வெளியிடவில்லை. ஆனால் இந்த கருத்துக்கு, சில ஆதரவாளர்களும் இருக்கவே செய்கின்றனர்.
புரோஸ்டேட் புற்றுநோய்
இந்த கருத்தும், திடமான முடிவுடையது அல்ல. ஆனால், இரு வேறு ஆய்வுகள், மாதுளைச் சாறு புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிராக போராட உதவுகிறது என்று கூறுகின்றன. ஆய்வுக்கூடத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சோதனையில், மாதுளைச் சாறு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைத்து, அவற்றின் அழிவை அதிகரிக்கச் செய்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதய நோய்கள்
ஆய்வுக்கூடப் பரிசோதனையில், மாதுளைச் சாறு, இதய நோயாளிகளின் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கொடுக்கிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை: மாதுளைச் சாறு, இதய நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுப்போர்க்கு, எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம்.
வயிற்றுப்போக்கு வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர், மாதுளைப் பழத்தை உட்கொள்வதன் மூலம் போக்கலாம்.
உடல் எடை குறைய
மாதுளை, அதிக கலோரிகள் இல்லாத பழமாதலால், இது உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


The value of akattikkirai - அகத்திக்கீரையின் அருமை

TamilKadalai Natural Medicine's


தாவரங்களில் கீரை வகைகள் மிகவும் சத்து மிக்கவை என்பது நாம் அறிந்ததே. அதிலும் அகத்திக்கீரை அதிக சத்துக்களையும், வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சுவையான இக்கீரை, நம் நாடெங்கும், குறிப்பாகத் தமிழகத்தில் பயிரிடப்படுகிறது.
வெற்றிலைக் கொடிக்காலில் பற்றுத் தாவரமாகவும் இக்கீரையைப் பயிரிடுகிறார்கள். மலேசியாவில் பிறந்தது அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகை செடியாகும். அகத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் கொண்டது.
இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி என்றும், சிவப்புப் பூக்களைக் கொண்டது செவ்வகத்தி என்றும் அழைக்கப்படுகின்றன.
அடங்கியுள்ள சத்துக்கள்…….. ஈரப்பதம்-73 சதவீதம், புரதச்சத்து-83 சதவீதம், தாது உப்புகள்-3.1 சதவீதம், நார்ச் சத்து-2.2 சதவீதம், மாவுச்சத்து-12 சதவீதம், கொழுப்புச் சத்து-1.4 சதவீதம் என்ற அளவில் சத்துக்கள் உள்ளன.
தாது உப்புகளில் சுண்ணாம்புச் சத்து,பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வைட்டமின் ஏ, தயாமின், நிபோ பிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின்-சி போன்றவையும் அடங்கியுள்ளன. மேலும் அகத்தி மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.
குணம்……….. அகத்திக்கீரை பொதுவாக நஞ்சை நீக்கும் குணமுள்ளதால், மருந்துண்μம் காலங்களில் இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
பயன்படுத்தும் விதம்………… அகத்திக் கீரையை வதக்கி உண்ணலாம். குழம்பில் இட்டும் சாப்பிடலாம். பூக்களையும் வறுத்து உண்ணலாம். பூக்களை கசாயமாக்கியும் அருந்தலாம். இலைச்சாறை தேனில் கலந்து அருந்தலாம்.
அகத்தியின் மருத்துவப் பயன்கள்……….. அகத்திப் பூவை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்தி இலைச் சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல், இரைப்பு மாறும். இலைச்சாறை மூக்கில் உறிஞ்சினால் தலைநீர் இறங்கும்.
அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறோடு அதே அளவு தேன் கலந்து அருந்தினால் வயிற்று வலி நீங்கும். இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவந்தால் புண்கள் ஆறும்.
அகத்திக்கீரைப் பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவந்தால் நாள்பட்ட வயிற்று வலி மாறும். அகத்திக்கீரை பால் சுரப்பைக் கூட்டும். இக்கீரையை உணவில் சேர்த்துவந்தால் மலச்சிக்கல் தீரும். அகத்திப் பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசினால், தலைவலி மாறும்.
அகத்திப் பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, அதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், சளி தீரும். அகத்திக்கீரை பித்தநோயை நீக்கக்கூடியது என்பதோடு, உடல் சூட்டைத் தணிக்கக்கூடியது.